Sun TV தான் தற்போது தமிழ் சின்னத்திரையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் சன் டிவி இரண்டாம் இடத்தில் இருக்கும் விஜய் டிவியை விட நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது.
இந்நிலையில் Sun TVயில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் கதையை அனுமதி இல்லாமல் பெங்காலி மொழியில் ரிமேக் செய்து ஒளிபரப்பியதற்காக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு விகடன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும், அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விகடன் நிறுவனம் சார்பில் அனுப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.