ரஷ்யாவில் தனது 23 வருட கால சேவையை முன்னெடுக்கும் ரெட்விங் (red wings) விமானம் இன்று வியாழக்கிழமை காலை தனது சேவையை இலங்கை மத்தளை விமானநிலையத்தில் ஆரம்பித்தது.
ரெட்விங் விமானம் 412 பயணிகளுடன் இன்று காலை 9மணியளவில் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இன்று முதல் வாரத்திற்கு இரண்டு தடவைகள் மொஸ்கோவிற்கும் மத்தளைக்கும் இடையிலான சேவையை ஆரம்பிக்கும் என விமான நிலைய முகமையாளர் அறிவித்துள்ளார்.