India மற்றும் New Zealand அணிகளுக்கிடையிலான T20 தொடரின் முதலாவது போட்டி நேற்று ராஞ்சியில் இடம்பெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தது.
அந்த வகையில் New Zealand விதித்திருந்த 177 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 21 ஓட்டங்களால் தோல்வி அடைந்திருந்தது.
இந்நிலையில் போட்டி நடைபெற்ற ராஞ்சி மைதானந்த்தின் பிட்ச் குறித்து இந்திய அணியின் அணித்தலைவர் Hardik Pandya அதிருப்தியை வெளியிட்டிருந்தார். புது பந்தில் உருவாக்க முடிந்த அதிகளவான Spin குறித்தே Hardik Pandya அதிருப்தி வெளியிட்டிருந்தார். இதே கருத்தை New Zealand அணித்தலைவர் Mitchell Santner உம் கூறியிருந்தமை குறிப்பிடத்த்தக்கது.
இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி ஞாயிறு Lucknow இல் இடம்பெறவுள்ளது.