QR முறையைப் புறக்கணித்து எரிபொருளை விநியோகித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
“பல நிரப்பு நிலையங்கள் எரிபொருள் விநியோகத்தில் “தேசிய எரிபொருள் பாஸ் QR” முறையைப் பின்பற்றுவதில்லை,” என்று ஒரு அதிகாரி கூறினார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகியவற்றின் அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
QR விநியோக பொறிமுறையை மீளாய்வு செய்வதற்கான ஒரு கூட்டம் நடத்தப்பட்டது, பின்னர், கோட் முறையைப் பின்பற்றாத பல எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டது.
மின்சார சபையினால் செலுத்த வேண்டிய 105 பில்லியன் ரூபாவை மீளப்பெறுதல், தடையற்ற எரிபொருள் விநியோகத்திற்கான சரக்குத் திட்டங்கள் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தொடர்வது குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.