Junior NTR நடித்த RRR திரைப்படம் இரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றிகரமாக அமைந்து விட்டதால் படத்தில் நடித்த NTRஇன் அடுத்த திரைப்படம் எதுவாக இருக்கும் என்ற எதிபார்ப்பு இரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் பிரபலமான ஹீரோக்களுக்கு ஹிட் கொடுத்த இயக்குனர் கொரட்டாலா சிவா படத்தில் நடிக்க இருக்கிறார் NTR. கொரட்டாலா சிவா தற்போது வெளியாகியிருக்கும் “ஆச்சார்யா”திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதனால் அடுத்த திரைப்படத்தைப் பற்றி பேசியிருக்கிறார். சிவா கூறும்போது, “என் அடுத்த படத்தில் NTR நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக முதலில் ஆலியா பட் நடிப்பதாக இருந்தது. ஒப்பந்தம் செய்த பிறகு தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் விலகிக் கொண்டார்.
இப்போது ராஷ்மிகாவும், பூஜா ஹெக்டேவும் நடிக்க போட்டி போடுகிறார்கள். காரணம் இது Pan Indian படமாக வர இருக்கிறது. அதிக பட்சமாக ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது” என்று கூறியிருக்கிறார் கொரட்டாலா சிவா.