நெற்செய்கைக்கான எம்.ஓ.பி (Muriate of Potash) உரத்தின் விலையை இவ்வருடம் 4,500 ரூபாவால் குறைக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. தற்போது சந்தையில் எம்.ஓ.பி உரத்தின் 50 கிலோ மூடை 18,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பகிறது. இந்தத் தொகை விவசாயிகளுக்கு சிரமமாக இருப்பதால், விலையைக் குறைக்கத் தீர்மானித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில்,இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
குறைந்த விலையில் உரங்களை வழங்குவதற்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான இரண்டு உர நிறுவனங்கள் உள்ளன.இதனால்,சந்தையில் போட்டி உருவாகியுள்ளது. இதன்படி, யூரியா உரத்தின் விலை குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் டி.எஸ்.பி (Triple Super Phosphate) மற்றும் எம்.ஓ.பி (Muriate of Potash) ஆகிய உரங்களின் விலை மேலும் குறையுமென, தனியார்துறை உர விற்பனையாளர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.