மெட்டா நிறுவனம் இரண்டாவது சுற்றில் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
முகநூல் – வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் 18 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில், 4 மாதங்களுக்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பரில் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இருப்பினும், சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது என தகவல் வெளியானது.இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைப்படுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து இருக்கிறது.
இம்முறை பொறியியல் அல்லாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தனது பணியாளர்கள் முன்னிலையில் கூறும்போது,
எங்களது குழுவின் அளவை குறைப்பது பற்றி நாங்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். அதனால், 10 ஆயிரம் பேர் குழுவில் இருந்து பணி நீக்கம் செய்யப்படலாம் என கூறியுள்ளார்.