New Zealand அணிக்கெதிரான Test போட்டியில் இலங்கை அணி New Zealand அணிக்கு 285 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.
4 ஆம் நாளான இன்று தொடர்ந்து தனது 2 ஆவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு Chandimal Mathews இணை சிறப்பான இனைப்பாட்டத்தை வழங்கியது. தொடர்ந்து Mathews சதம் அடங்கலாக இலங்கை அணி தனது இரண்டாம் இன்னிங்சில் 302 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் Mathews 115 ஓட்டங்களையும் Chandimal 42 ஓட்டங்களையும் Dhananjaya De Silva ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
285 என்ற வெற்றி இலக்குடன் தனது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் New Zealand 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஆட்டத்தின் 5 ஆம் நாளான நாளை Nez Zealand அணியின் வெற்றிக்கு இன்னமும் 257 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி வெற்றி பெற பந்துவீச்சாளர்களை நம்பியுள்ளது.