இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 ஆவது Test போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தின் நிறைவில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இன்று தனது முதலாவது இன்னிங்சில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. நீண்ட நாட்களாக Test சத்தத்திற்கு காத்திருந்த Virat Kohli இன்று சதம் அடித்ததுடன் 186 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
தனது முதலாவது இன்னிங்சில் 571 ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 91 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து தனது இரண்டாம் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நாளை ஆட்டத்தின் 5 நாள் ஆகும்.