Bollywood நடிகைJacqueline Fernandezஇன் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், Jacquelineக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Ranbaxy நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரிடம் மோசடி செய்த ரூ.200 கோடி ரூபாயில், 5.71 கோடி ரூபாயை சந்திரசேகர் Jacquelineக்கு பரிசாக கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, Jacqueline வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.7 கோடியை முடக்கியுள்ளது.
பண மோசடி வழக்கில் கைதாகி கடந்த 2019-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவிந்தர் சிங்கை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகக் கூறி, சிவிந்தர் சிங் மனைவி ஆதிதி சிங்கிடம் சுகேஷ் சந்திரசேகர் சுமார் 200 கோடியை மோசடி செய்ததாக ஆதிதி சிங் குற்றம் சாட்டியுள்ளார்.