துபாய்,
எம்எஸ் தோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. தங்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்களை தந்த தோனி இன்னும் சில வருடங்கள் விளையாட மாட்டாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஏற்கனவே 2023 ஐபிஎல் சீசனுடன் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசனில் விளையாட முயற்சிப்பேன் என்று தோனி கூறியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் முடிவில் தோனிக்கு 43 வயதாகிறது.
அப்போது தோனியிடம் ஒரு ரசிகர், ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த டோனி, நான் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யப் போகிறேன் என்பது பற்றி இன்னும் யோசிக்கவில்லை. ஏனென்றால் நான் இன்னும் கிரிக்கெட் விளையாடுகிறேன்.
நான் இன்னும் ஐபிஎல் தொடரில் இருக்கிறேன். ஆனால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யப் போகிறேன் என்று யோசிப்பதில் ஆர்வமாக உள்ளேன். ஆனால் ஒன்று கண்டிப்பாக செய்வேன். இந்திய ராணுவத்துடன் அதிக நேரம் செலவிடுவேன். ஏனென்றால் கடந்த சில வருடங்களாக என்னால் ராணுவத்தில் சென்று பணியாற்ற முடியவில்லை” என்று எம்எஸ் தோனி வருத்தத்துடன் கூறினார்.