இலங்கை கால்பந்து குழாமில் அரசியல் தலை ஈடுகளால் அங்கீகரிக்க முடியாத முறையில் தேர்தல் நடைபெற்றமை தொடர்பாக FSL எனப்படும் Football SriLanka இனை சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பான AFC இணைந்து தடை செய்திருந்தது.
இந்நிலையில் FSL இன் முன்னாள் தலைவர் பத்திரிகைகளுக்கு வழங்கிய செய்தியில் இலங்கை குறித்த தடையினால் ஆண்டொன்றுக்கு ஒரு பில்லியன் வரை இழப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதே நேரம் FIFA மற்றும் AFC இணைந்த குழு ஒன்று FSL தொடர்பாக Colombo வந்து மதிப்பாய்வு செய்யவுள்ளது.