செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketEngland Lions அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய Sri Lanka A அணி

England Lions அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய Sri Lanka A அணி

Published on

spot_img
spot_img

England Lions மற்றும் Sri Lanka A அணிகளுக்கிடையிலான உத்தியோகபூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நேற்றைய தினம் நிறைவுக்கு வந்துள்ளது.இப்போட்டியில் England Lions அணிக்கு சவால் விடும்வகையில் துடுப்பெடுத்தாடி நம்மபிக்கை அளித்துள்ளது Sri Lanka A அணி.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய Sri Lanka A அணி முதலாவது இன்னிங்ஸில் 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து ஏமாற்றியது. துடுப்பாட்டத்தில் Sadeera Samarawickrama 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் England Lions சார்பாக Matthew Fisher 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய England Lions அணி Tom Haines இன் சதத்தின் உதவியுடன் 467 என்ற மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை பெற்று கொண்டது. துடுப்பாட்டத்தில் Tom Haines 118 ஓட்டங்களையும் Alex Lees 56, Matthew Fisher 53 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Sri Lanka A அணி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இமாலய ஓட்ட எண்ணிக்கையை அடைந்தது. Nishan Madushka 241, Nipun Dhananjaya 128, Oshada Fernando 114, Nuwanindu Fernando 80, Lakshitha Manasinghe 73 என இலங்கை அணி வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் Sri Lanka A அணி 9 விக்கெட்களை இழந்து 663 ஓட்டங்கள் எனற இமாலய ஓட்ட எணிக்கையை பெற்று ஆட்டத்தை இடை நிறுத்தியது.

333 என்ற இலக்குடன் தனது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய England Lions அணி 7 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டம் சமநிலையில் நிறைவுற்றது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி 7 ஆம் திகதி இடம்பெறும்.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this