யாழ். நகரில் 05 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். ஆறுகால் மண்டபப்பகுதியை சேர்ந்த இளைஞரே இவ்வாறு யாழ். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின்படி மேற்கொண்ட சோதனையின்போது இந்த இளைஞன் கைது செய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து, போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கோண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.