Chrome Browser ஐ உடனடியாக Update செய்யுமாறு தனது பயனர்களை Google எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் பல கோடி பயனர்களால் பயன்படுத்தப்படும் Googleஇன் Chrome உலாவி அண்மையில் Hack செய்யப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த சில தொழில்நுட்ப பிரச்சினைகளை Google நிறுவனம் தற்பொழுது சரி செய்துள்ளது.
இந்த நிலையில், Browsing செய்யவும், மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கவும், TV பார்க்கவும் நீங்கள் Chrome செயலியைப் பயன்படுத்தினால், உங்களது மென்பொருள் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது மிகவும் நல்லது.
ஏனெனில், இந்த பிரபலமான உலாவியில் மொத்தம் 30 பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய முக்கியமான புதுப்பிப்பை வெளியிடவுள்ளதாக Google அறிவித்துள்ளது.
Windows, Mac, Linux என அனைத்து முக்கிய தளங்கலும் Hack செய்யப்பட்டமையினால் Google நிறுவனம் இந்த புதுப்பிப்புக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.