Australian Open Tennis தொடரின் இறுதி போட்டி இன்று சிட்னி இல் இடம்பெற உள்ளது.
இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ள Djokovic மற்றும் Tsitsipas இன்றைய போட்டியில் Australian Open பட்டத்துக்காக மாத்திரம் அல்லாமல் உலகின் முதல் வீரர் யார் என்ற போட்டிக்காகவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெரும் வீரர் உலக தரைவரிசையில் முதலிடத்தை கைப்பற்றுவார் என்பது இன்றைய இறுதி போட்டியினை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
Novak Djokovic இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தனது 22 ஆவது Grand Slam பட்டத்தை பெற்று சாதனை படைக்க முடியும் என்பதுடன் 373 வாரங்கள் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த Djokovic மீண்டும் கடந்த June மாதத்தின் பின் தரவரிசையில் முதலிடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் கிரேக்க நாட்டவர் ஆன Tsitsipas முதல் தனது முதலாவது Grand Slam பட்டத்துக்காகவும் முதல் முறையாக தரவரிசையில் முதலிட பிடிப்பதற்காகவும் இவ் இறுதிப்போட்டியில் களமிறங்குவார்.