பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் கடந்த ஜனவரி மாதம் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜாஸி அடுத்த சில வாரங்களில் மேலும் 9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பாணையில் அவர், ‘’இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை பற்றி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆள்குறைப்பு செய்த போதே அறிவித்திருக்கலாமே? என்று கேட்கலாம். விரைவில் இது குறித்த தகவல் பகிரப்படும்,’’ என்று கூறியுள்ளார்.