9 வயது சிறுமியைக் கொடூரமாகக் தாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயின் சட்டரீதியற்ற கணவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக மீஹகதென்னை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீஹகதென்னை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் தாயார் சந்தேக நபரிடம் தனது மகளை ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாகவும், சந்தேக நபர் மது போதையில் வந்து பிளாஸ்டிக் மட்டை போன்ற ஒன்றினால் சிறுமியைத் தாக்கியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.