இன்னும் 3 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் 8 மாத கர்ப்பிணி மணப்பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (28). இவரும் சுஷ்மிதா (21) என்ற பெண்ணும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சுஷ்மிதா கர்ப்பம் அடைந்தார்.
சுஷ்மிதா ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் போது நரேஷ் குமார் வீட்டிற்கு வந்துள்ளார். 12ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனால் கடந்த ஒன்றரை மாதங்களாக நரேஷ் குமார் வீட்டில் சுஷ்மிதா தங்கியிருந்தார். இன்று 3 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சுஷ்மிதா இறந்து கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த நரேஷ்குமார் தனது காதலி சுஷ்மிதா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுஷ்மிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.