இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 50 பேருந்துகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (பிப்ரவரி 05) பெற்றுக்கொண்டார்.
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் அரச தலைவரிடம் பஸ்கள் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டன.
தீவின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்தும் முயற்சியில், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியாவினால் வாக்குறுதியளிக்கப்பட்ட மொத்தம் 500 பேருந்துகளின் ஒரு பகுதியாக இந்தப் பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் 75 பேருந்துகள் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 40 பேருந்துகள் தற்போது பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்திய அரசாங்கத்தால் இதுவரை மொத்தம் 165 பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.