2023 பெப்ரவரி 10 ஆம் திகதி திருகோணமலை புல்மோட்டையில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் 700 மருந்து மாத்திரைகளுடன் (PREGAB) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS வலகம்ப கடற்படை நிறுவனமும் குச்சவெளி காவல்துறையும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
திருகோணமலையில் இருந்து புல்மோட்டை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை சுற்றிவளைப்பு குழுவினர் சோதனையிட்டுள்ளனர். குறித்த நபர் 700 மருந்து மாத்திரைகளை விற்பனைக்காக எடுத்துச் சென்றதால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 41 வயதுடைய நிலாவெளி கோபாலபுரத்தைச் சேர்ந்தவர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மருந்து மாத்திரைகளுடன் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.