செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியா68 வயசு.. வாட்ஸ்அப் வழியாக உல்லாசம்! வீடியோ காலில் சிக்கிய தொழிலதிபர்! ரூ.2.7 கோடி பணம்...

68 வயசு.. வாட்ஸ்அப் வழியாக உல்லாசம்! வீடியோ காலில் சிக்கிய தொழிலதிபர்! ரூ.2.7 கோடி பணம் காலி.

Published on

spot_img
spot_img

குஜராத்தில் வாட்ஸ்அப் வீடியோ கால் வழியாக பெண்ணுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட விவகாரத்தில் சுமார் ரூ.2.7 கோடியை 68 வயதான தொழிலதிபர் ஒருவர் இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இது போன்ற சம்பவங்கள் பணம் பறிப்பதற்காக நடத்தப்படுவது இயல்பான ஒன்றுதான் என்று குஜராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது, “குஜராத்தின் காந்திநகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் எங்களிடம் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு புகார் கொடுத்திருந்தார். புகாரில் அவர் கூறியிருந்த விஷயங்கள் அனைத்தும் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

புகாரின்படி கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 10 மணிக்கு இவருக்கு ஒரு வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வீடியோ கால் வந்துள்ளது. வீடியோ காலின் எதிர் முனையில் ஒரு இளம்பெண் பேசியிருக்கிறார். அவர் மோர்பியிலிருந்து பேசுவதாக கூறியுள்ளார். பின்னர் இவரை வலுக்கட்டாயமாக செக்ஸ் வைத்துக்கொள்ள அழைத்திருக்கிறார். முதலில் இந்த தொழிலதிபர் மறுத்திருக்கிறார். ஆனால் இவரை சமாதானம் செய்த இளம்பெண் இதனால் எந்த பிரச்னையும் ஏற்படாது என்று கூறியிருக்கிறார்.
இதனை நம்பிய அவர் அப்பெண்ணுடன் வாட்ஸ்அப் வழியாக செக்ஸ் வைத்திருக்கிறார். இது சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்திருக்கிறது. அதற்குள் மறுமுனையிலிருந்து அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் அப்பெண்ணின் எண்ணிலிருந்து ஒரு வீடியோ வந்திருக்கிறது. வீடியோவில் இவரும் மறு முனையில் இப்பெண்ணும் செக்ஸ் வைத்துக்கொண்டிருந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ந்த அந்த நபர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருக்கிறார். அதற்குள் மற்றொரு மெசேஜ் வந்திருக்கிறது. அதில், இந்த வீடியோ வெளியிடப்படாமல் இருக்க ரூ.50 ஆயிரம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பணம் கொடுக்காவிடில் வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் என்று மிரட்டப்பட்டிருக்கின்றது.
இவரும் உடனடியாக அப்பெண் கேட்ட தொகையை கொடுத்திருக்கிறார். பின்னர் இரண்டு நாட்கள் எந்த பிரச்னையும் இல்லாம் இருந்திருக்கிறது. மூன்றாவது நாள் முன்பின் தெரியாத நம்பரிலிருந்துஅழைப்பு வந்திருக்கிறது. அழைப்பின் மறுமுனையில் டெல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் குட்டு ஷர்மா பேசியிருக்கிறார். இந்த விஷயம் வெளியில் கசிந்துவிட்டதாகவும் எனவே இது குறித்து எஃப்ஐஆர் பதியாமல் இருக்க ரூ.3 லட்சம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இந்த தொகையை தொழிலதிபர் கொடுத்திருக்கிறார். அதேபோல ஒரு வாரம் கழித்து மீண்டும் இவருக்கு வேறு ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது.

இந்த முறை டெல்லி சைபர் கிரைம் போலீஸ் பிரிவிலிருந்து பேசுவதாக கூறியுள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் எனவே இது குறித்து மேலும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அனைத்து காவல்துறையினருக்கும் பணம் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு மொத்தமாக ரூ.80.77 லட்சம் கேட்டிருக்கிறார். தொழிலதிபரும் பயந்துக்கொண்டு அவர் கேட்ட பணத்தை கொடுத்திருக்கிறார். பின்னர் மீண்டும் ஒரு வாரம் கழித்து ஒரு வந்த அழைப்பில் பேசிய நபர் அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும் எனவே இதனை மறைக்க பணம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக தொழிலதிபர் ரூ.30 லட்சத்தை கொடுத்திருக்கிறார். இருந்தும் இவரது வீட்டிற்கு நீதிமன்ற நோட்டீஸ் வந்திருக்கிறது. அதில், தனது பெயர் இருப்பதை பார்த்து அதிர்ந்த தொழிலதிபர் அதன் பின்னர் வந்த அழைப்புகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்திருக்கிறார். இப்படியாக சுமார் 11 அழைப்புகள் வந்திருக்கிறது. கடைசியாக சந்தேகமடைந்த அவர் எங்களிடம் வந்திருக்கிறார். நாங்கள் விசாரணை நடத்தியதில் இவர்கள் அனைவரும் போலியான காவல்துறையினர் என்பதை உறுதி செய்தோம். மட்டுமல்லாது இது ஏமாற்று அழைப்பு என்பதையும் கண்டுபிடித்தோம். தற்போது குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். இவர் இதுவரை ரூ.2.7 கோடி ரூபாயை இழந்திருக்கிறார்” என்று கூறியிள்ளனர்.

Latest articles

சுவிட்சர்லாந்து விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்…..

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக...

இன்றும் நாட்டில் அதிக வெப்பநிலை ….

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என...

கிளிநொச்சி – பளை இயக்கச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் காடழித்து காணிகளை கைவசப்படுத்த முயற்சி….

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

More like this

சுவிட்சர்லாந்து விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்…..

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக...

இன்றும் நாட்டில் அதிக வெப்பநிலை ….

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என...

கிளிநொச்சி – பளை இயக்கச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் காடழித்து காணிகளை கைவசப்படுத்த முயற்சி….

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள்...