பதுளையில் பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றில் திடீரென பிரேக் செயலிழந்து பள்ளத்தை நோக்கி இழுத்துச் சென்ற போது பேருந்தை சாரதி மேடு நோக்கி செலுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நேற்று காலை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த பேருந்தின் பிரேக் செயலிழந்துள்ளது.
பேருந்தை பெரகல – விகாரகல பகுதியில் நிறுத்திய சாரதி, வீதியின் வலப்பக்கத்தில் உள்ள மண்மேடு நோக்கி செலுத்திச் சென்ற பேருந்தை நிறுத்தியுள்ளார்.
அவ்வாறு செய்யாவிடின் மறுபுறத்தில் உள்ள 500 மீற்றர் பாறையில் இருந்து கீழே விழுந்து பாரிய விபரீதத்தை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்தனர்.
விபத்தை தடுக்க நடவடிக்கை எடுத்த பேருந்தின் சாரதிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
சாரதி பேருந்தை நிறுத்தாமல் இருந்திருந்தால் பரிய உயிர் பலி ஏற்பட்டிருக்கும் என பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.