மட்டக்களப்பு கொக்குவில் மற்றும் மட்டு தலைமையக பொலிஸ் பிரிவுகளிலுள்ள பிரதேசத்தில் பூட்டியிருந்த 6 வீடுகளை உடைத்து அங்கிருந்து பணம் தங்க நகைகள், மடிகளணி மற்றும் மின் உபகரணங்களை திருடிவந்த 14 வயது உடைய சிறுவன் ஒருவனுடன் இருவரையும் திருட்டு பொருட்களை வாங்கி 4 பேர் உட்பட 6 பேரை திங்கட்கிழமை (08) கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி வரை அந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக பூட்டியிருந்த 4 வீடுகளின் கூரை மற்றும் யன்னல் கதவுகளை உடைத்து அங்கிருந்த 4 மடி கனணி கையடக்க தொலைபேசிகள் தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான மின்சார உபகரணங்கள் திருட்டுபோயுள்ளது.
இது தொடர்பாக கொக்குவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி. சசீந்திராவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எதிரிமானவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கே.யு.பி. விமலரத்தினவின் வழிகாட்டலில் சம்பவதினமான திங்கட்கிழமை பெரும் குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் கொக்குவில் பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 25 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்.
இதல் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த 4 வீட்டை உடைத்தது திருடியதுடன் மட்டக்களப்பு நகர் கண்ணகையம்மன் 7 குறுக்கு வீதியிலுள்ள பூட்டியிருந்த வீடு ஒன்றை கடந்த 5 ஆம் திகதி உடைத்து அங்கிருந்து ஒரு பவுண் தங்க சங்கிலி 3 தோடுகள், கையடக்க தொலைபேசிகள் திருடியதுடன் பார்வீதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து மரம்வெட்டும் மிசார உபகரணம் மற்றும் மின்சார உபகரணங்களை திருடியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து திருடிய பொருட்களை மீட்டதுடன் திருடிய மடிகனணிகள் தண்ணீர் மோட்டர் மற்றும் தங்க நகைகளை வாங்கிய காத்தான்குடி, சத்துருக்கொண்டான், கொக்குவில் பிரதேசங்களைச் சேர்ந்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் மற்றும் பழைய இருப்பு விற்பனை நிலையம், நகைக்கடை போன்ற கடை முதலாளிகள் 4 பேரை திருட்டுப் பொருளை வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்தனர்.