55 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்வதற்காக அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் மொத்த வியாபார நிலையங்களுக்கும் முட்டை கையிருப்பு வழங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர். எம். திரு சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
லொறிகளில் பொருளாதார நிலையங்கள் மற்றும் மொத்த விற்பனைக் கடைகளுக்குச் சென்று தலா 53 ரூபாவுக்கு முட்டை வழங்குவதாகவும் விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்வனவு செய்தால் 50 ரூபா விலையில் முட்டை வழங்குவதாகவும் ரத்நாயக்க குறிப்பிட்டார். இதன் காரணமாக சந்தையில் முட்டை விலை அடுத்த சில நாட்களில் கட்டுப்படுத்தப்படும் என்றார்.
சிங்கள இந்து புத்தாண்டு காலப்பகுதிக்குள் முட்டையொன்று 35 ரூபா தொடக்கம் 40 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என ரத்நாயக்க தெரிவித்தார்.