Homeஇலங்கை5000 டொலர்களுக்காக சீனர்களுக்கு விற்கப்படும் இலங்கை பெண்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

5000 டொலர்களுக்காக சீனர்களுக்கு விற்கப்படும் இலங்கை பெண்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

Published on

தாய்லாந்தில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி இலங்கை பெண்களை சீனர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது .அவ்வாறு சீனர்களுக்கு விற்கப்பட்ட பெண்கள் தப்பி சென்று தாய்லாந்து பொலிசில் தஞ்சம் அடைந்த நிலையில் நேற்றைய தினம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ருவான் பத்திரன என்பவரின் மகன் என கூறப்படும் நபரே இவ்வாறு தம்மை விற்பனை செய்ததாக நாட்டை வந்தடைந்த பெண்கள் ஊடகமொன்றிற்கு பதிவுசெய்துள்ளனர்.

இந்நிலையில் சீனர்களின் தொழிற்சாலைகளில் எங்களை சித்திரவதைக்குட்படுத்தி வேலை செய்தார்கள். வெயிலில் நிற்க வைப்பார்கள். வெயிலில் ஓடச் சொல்லுவார்கள். மின்சாரம் பாய்ச்சினார்கள்.

சுமார் ஒரு மாத காலம் உணவின்றி அறையில் அடைத்து வைத்தார்கள். இலங்கைக்கு அனுப்புவதற்கு 5000 டொலர்களை செலுத்துமாறு கூறியதாகவும் யுவதிகள் அறிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் அம்பலாந்தோட்டை உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் அனுர சேனாரத்னவின் அலுவலகத்தில் இருந்து ருவான் பத்திரன என்ற மொழிபெயர்ப்பாளர் பணத்திற்கு பெண்களை கடத்துவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட சுற்றிவளைப்பு குழுவினர் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் கடந்த 6ஆம் திகதி இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ருவன் பத்திரன என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். தற்போது வீட்டில் இருந்து காணாமல் போன பிரதான கடத்தல்காரன் என கூறப்படும் அனுர சேனாரத்னவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கடத்தல் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடத்தல் காரர்களிடம் சிக்கி தாய்லாந்தில் அவதிப்பட்டு வந்த இருபது வயதுடைய நான்கு யுவதிகள் மற்றும் சிறுமிகள் நேற்று காலை இலங்கை வந்தடைந்தனர்.அவர்கள் அம்பலந்தோட்ட பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this