ஹாங்காங்கில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டினருக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகம் முழுவதும் பரவி ஒட்டுமொத்த மனித செயல்பாட்டுகளையும் முடக்கியது.
பெரும்பாலான நாடுகள் இன்று வரை ஊரடங்கு நடவடிக்கையால் பொருளாதாரம் சீர்குலைந்து சிக்கலில் தவித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உருக்குலைந்த சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், வெளிநாட்டினருக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், ஹாங்காங் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டினர் கட்டாயமாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை கூட தளர்த்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த சலுகைகள் சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாறு நாட்டிற்குள் வரும் சுற்றுலா பயணிகள் நிச்சயமாக இரண்டு நாட்களாவது ஹாங்காங்கில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளது.