இஸ்ரேலிய சிறையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீன கைதி 40 ஆண்டுகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவி ப்ரோபர்க் என்ற இஸ்ரேலிய இராணுவ வீரரை கடத்திக் கொன்றதாக கரீம் யூனிஸ் என்ற அந்தக் கைதி 1983 ஆம் ஆண்டு குற்றங்காணப்பட்டார்.
அரசியல் செயற்பாடுகள் மற்றும் இஸ்ரேலுடன் உடன்படிக்கைக்கான அழைப்பு என அவர் சிறையில் முக்கியமான கைதியாக இருந்து வந்தார். யூனிஸ் இஸ்ரேலிய குடியுரிமையை வைத்திருந்த நிலையில் இஸ்ரேலிய உள்துறை அமைச்சு அதனை நீக்கும்படி கேட்டுள்ளது.
இஸ்ரேலிய மத்திய நகரான ரானாவில் கடந்த வியாழக்கிழமை சூரியோதயத்திற்கு முன் யூனிஸ்் விடுதலை செய்யப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து வடக்கு இஸ்ரேலில் இருக்கும் அவரது சொந்த ஊரான ஆராவில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.