செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கை4 மாகாணங்களில் அரச வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

4 மாகாணங்களில் அரச வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Published on

spot_img
spot_img

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டுப் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நான்கு மாகாணங்களில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று (13) காலை 8.00 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அதன் ஆரம்ப கட்டமாக மேல், தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

வடமேல், வடமத்திய, வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை (14ஆம் திகதி) காலை 8:00 மணி முதல் ஒருநாள் வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக GMOA செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார். எதிர்வரும் 15ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் பதிலைக் கண்காணித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் புதன்கிழமை (15) அறிவிக்கப்படும் என்றும் GMOA செயலாளர் மேலும் தெரிவித்தார்.

குழந்தைகள், மகப்பேறு, புற்றுநோய், முப்படை மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சை பிரிவுகள் மற்றும் தேசிய மனநல சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this