தற்போது 400 நாளாந்த புகையிரத பயணங்களை 370 ஆக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திரு.பந்துல குணவர்தன இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது இயக்கப்படும் தினசரி 30 ரயில் பயணங்கள் நிறுத்தப்படும், 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த 30 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டாலும் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு இடையில் மற்றுமொரு புகையிரதத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுனர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த பொதுச் சேவை ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதுடன், மேலும் 44 ஸ்டேஷன் மாஸ்டர்களும் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.