வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. ‘மிக்ஜம்’ புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும். இன்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரித்து நாளை மாலை வரை கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், வடக்கு மற்றும் கிழக்கின் கடல் பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலாளர் கடலுக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
11.4° வடக்கு அகலாங்கு மற்றும் 82.5° கிழக்கு நெடுங்கோடு அருகில் இன்று (03.12.2023) யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 325 கி.மீ தொலைவில் சூறாவளியாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புக்களில் பயணிக்க வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அப்பகுதியில் கடற்றொழிலில் நடவடிக்கையில் ஈடுபட்டால் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.