ICC உலக கிண்ண தொடரின் முதலாவது போட்டியில் England அணி 50 ஒவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய England அணி ஆரம்பத்தில் ஓட்டங்களைக் குவித்தாலும் New Zealnd அணி இறுதி நேரத்தில் சிறப்பாக பந்துவீசி ஓட்டங்களை மட்டுப்படுத்த 50 ஒவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்களை பெற்று கொண்டது. England தனது இறுதி 6 விக்கெட்களை 94 ஓட்டங்களுக்குள் இழந்திருந்தது.
தடுப்பாட்டத்தில் Joe Root 77 Buttler 42 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றனர். இப் போட்டியில் துடுப்பாட்டத்துக்கு களமிறங்கிய 11 வீரர்களும் இரு இலக்க ஓட்டங்களை பெற்று இப் போட்டி ஒரு நாள் சர்வதேச போட்டி சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தது.
பந்து வீச்சில் Matt Henry 3 விக்கெட்களையும் Santner matrum Philips தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
New Zealand அணி 283 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்க உள்ளது.