செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஜோதிடம்28/04/2022 வியாழக்கிழமை இன்றைய நாளில் உங்களது இராசிகளுக்கான பலன்கள் :

28/04/2022 வியாழக்கிழமை இன்றைய நாளில் உங்களது இராசிகளுக்கான பலன்கள் :

Published on

spot_img
spot_img

மேஷம்: விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி சோர்வு வந்து விளகும். வாகனத்தை இயக்கும்போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை அடைக்க உதவிகள் கிடைக்கும். புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

மிதுனம்: உறவினர் நண்பர்கள் ஆதரவாக பேசத்தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்டநாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புதுவாய்ப்புகள் தேடி வரும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் அறியாமையே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

கன்னி: மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

துலாம்: விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்: நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

தனுசு: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பழைய இனிய சம்பவங்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

கும்பம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

Latest articles

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம்- சிண்டிகேட் சர்வேஸ் கருத்துக்கணிப்பாளர் கூறுகிறார்

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம் என்று இலங்கையின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது...

தலைவர் 171 படத்திற்காக தெரிவுசெய்திருக்கும் 5 மாஸ் வில்லன்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் முடித்த கையோடு, சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171 படத்தின் வேலைகளை ஆரம்பித்து...

நாடளாவிய ரீதியில் முதல் இடம்பிடித்த யாழ் வேம்படி மகளிர் கல்லூரி!

இன்று வெளியான 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ்...

இந்திய அணிக்காக 22 வயதில் இந்தியா அணிக்காக ஆடப் போகும் தமிழக வீரர்.

சென்னை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். 22 வயதில் சாய்...

More like this

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம்- சிண்டிகேட் சர்வேஸ் கருத்துக்கணிப்பாளர் கூறுகிறார்

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம் என்று இலங்கையின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது...

தலைவர் 171 படத்திற்காக தெரிவுசெய்திருக்கும் 5 மாஸ் வில்லன்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் முடித்த கையோடு, சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171 படத்தின் வேலைகளை ஆரம்பித்து...

நாடளாவிய ரீதியில் முதல் இடம்பிடித்த யாழ் வேம்படி மகளிர் கல்லூரி!

இன்று வெளியான 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ்...