25,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு அரச உர கம்பனிகள் மற்றும் தனியார் துறைகளில் உள்ள யூரியா உரத்தின் அளவு மற்றும் விவசாய சேவை நிலையங்களில் எஞ்சியுள்ள கையிருப்பு ஆகியவற்றின் அடிப்படையில், 2023 யாலா பருவத்திற்கு சுமார் 25,000 மெற்றிக் தொன் யூரியா உரம் மேலும் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. .
இதன்படி, லங்கா உரக் கம்பனியால் தேவையான உரத்தில் 60% மற்றும் கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி லிமிடெட் மூலம் 40% உரத்தை இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.