Homeஇந்தியா2024-ம் வருடத்திற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5-ல் நடைபெறும்

2024-ம் வருடத்திற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5-ல் நடைபெறும்

Published on

2024-ம் வருடத்திற்கான நீட் தேர்வு தேதிகள் தற்போது தேசிய தேர்வு முகாமை மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளன. மருத்துவக் கல்லூரிகள், ஒன்றிய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. நீட் தேர்வால் பல உயிரிழப்புகளும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது. நீட்டை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2024 மே 5-ல் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் 2024 ஜூன் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ தேர்வும் 2 அமர்வுகளாக நடத்தப்படும் என்றும், ஜேஇஇ முதல் அமர்வு தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1 வரையும், 2-வது அமர்வு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15-க்குள்ளும் நடத்தப்படும் என்ற அறிவிப்பு தேசிய தேர்வு முகாமையால் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கியூட் (CUET) நுழைவுத் தேர்வு மே 15 முதல் மே 31-க்குள் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகாமையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this