எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை (மார்ச் 22) நடைபெறவுள்ளது.
அதன்படி, இச்சந்திப்பு ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.