2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, அரசாங்க அச்சகத் திணைக்களத்திடம் இருந்து தபால் மூல வாக்குச் சீட்டுகளை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ளவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்தது.
இதன்படி, தபால் மூல வாக்களிப்புக்கான புதிய திகதிகள் உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் இடையூறு இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் அரசாங்க அச்சுப்பொறியாளர் கங்கானி லியனகே வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலின் அச்சுப் பணிகளின் பாதுகாப்பு விடயங்களை மேற்பார்வையிடுவதற்காக 60 உத்தியோகத்தர்களை (பகலில் 35 மற்றும் இரவில் 25) ஈடுபடுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சிடும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14), தேர்தல் ஆணையம், “தவிர்க்க முடியாத காரணங்களை” மேற்கோள் காட்டி, பிப்ரவரி 15 ஆம் தேதி திட்டமிட்டபடி தபால் வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது என்று அறிவித்தது.