Homeஇந்தியா2 மனைவி கட்டியவருக்கு வினோத பிரச்சினை: தினமும் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் அவதி அடைந்த கணவன்.

2 மனைவி கட்டியவருக்கு வினோத பிரச்சினை: தினமும் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் அவதி அடைந்த கணவன்.

Published on

உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனியே சென்றுள்ளார். அவ்வப்போது தனது மனைவியை நேரில் வந்து சந்தித்து சென்றதாக தெரியவருகிறது. இதற்கிடையே, அவருக்கு மற்றொரு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே, தனக்கு முதல் திருமணம் நடந்து குழந்தைகள் இருப்பதை மறைத்து அவரை 2-வது திருமணம் செய்து கொண்டு அவரை தனி குடித்தனம் எடுத்து வந்து வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, தனது கணவரின் முதல் திருமணம் தொடர்பாக இரண்டாவது மனைவிக்கு தகவல் தெரியவர, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற போலீசார் மூவரையும் அழைத்து விசாரித்ததில், கணவர் எனக்குதான் என இருவரும் காவல்நிலையத்திலேயே கட்டிபுரண்டு சண்டையிட்டனர். இதனால் மூவரையும் கவுன்சிலிங் அனுப்பிய காவல் துறையினர், பேசி முடிவெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, திங்கள் முதல் புதன் கிழமை வரை கணவர், முதல் மனைவியின் வீட்டிலியும், வியாழன் முதல் சனிக்கிழமை வரை இரண்டாவது மனைவியின் வீட்டிலும் இருந்து குடும்பம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் கணவர் எந்த மனைவியோடு இருக்க ஆசைப்படுகிறாரோ, அம்மனைவியுடன் இருந்துகொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விசயத்திற்கு மூவரும் ஒப்புக்கொள்ளதாக விருப்ப ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு கையெழுத்தும் வாங்கப்பட்டுள்ளது.

Latest articles

கண்ணிமைக்கும் நேரத்தில் கண்மண் தெரியாமல் வங்கி ஊழியரை வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்

அகமதாபாத்: குஜராத்தில் வங்கி ஊழியரை, வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது ....

மருதானையில் சத்தியாக்கிரகத்தை தாக்கிய குண்டர்கள் விளக்கமறியலில் – சில குண்டர்கள் பொலிஸாரிலிருந்து வந்ததால் மருதானை தாக்குவதற்கு பொலிஸார் அனுமதி.

கடந்த 3ஆம் திகதி மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக இடம்பெற்ற சுதந்திர சத்தியாக்கிரகத்தின் போது கலவரத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட...

ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம், உற்சாகத்தில் ரசிகர்கள்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர்...

ராணுவ அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு கேட்டு மோசடி; பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நூதன முறையில் திருட்டு.

சென்னை புளியந்தோப்பு அடுத்த சூளை ஆவடி சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் வளர்மதி (வயது 42). இவரது கணவர் ரமேஷ்....

More like this