Bangladesh மற்றும் England அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 326 ஓட்டங்களைப் பெற்று கொண்டது. துடுப்பாட்டத்தில் Jason Roy 132 ஓட்டங்களையும் அணித்தலைவர் Jos Buttler 76 ஓட்டங்களையும் Moeen Ali 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வங்க தேசம் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கெட் களையும் இழந்து 132 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.