ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு ஆணைக்குழு தீர்மானித்த போதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காமை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் வாக்களிப்பு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். .
தேர்தலுக்குத் தேவையான பணத்தைப் பெற்று தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசித்த பிறகு அல்லது உச்ச நீதிமன்ற நடைமுறைகளைப் பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.