15 வயது சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்து அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு அச்சுவேலி காவல்றையினர், சிறுமியின் தாயாருக்கு கூறி அனுப்பியுள்ளனர்.
அச்சுவேலி தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மதுபானம் பருக்கப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டை பதிவு செய்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பிக்குமாறு கூறி சிறுமியை தாயாருடன் அனுப்பியுள்ளனர்.
நேற்று இரவு 8 மணிவரை சிறுமி யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையிலோ அல்லது தெல்லிப்பழை ஆதார மருத்துமனையிலோ அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுமியை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முற்படுத்த அச்சுவேலி காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணிக்கப்பட்டுள்ளது.