15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிவான் நேற்று செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டுள்ளார்.
பேஸ்புக் ஊடாக 15 வயது சிறுமியுடன் தொடர்பைப் பேணிய இளைஞரே கைது செய்யப்பட்டவராவார்.மாத்தறையைச் சேர்ந்த 22 வயதுடைய குறித்த இளைஞர், சிறுமியை பிறிதொரு இடத்தில் சந்தித்து அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று பல நாட்கள் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது மகள் இனந்தெரியாத இளைஞனுடன் வீடு ஒன்றில் தங்கியிருப்பதாக சிறுமியின் தாயாருக்குக் கிடைத்த தகவலின்பேரில் சிறுமியின் தாய் திவுலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்ததையடுத்து, சிறுமி தாயின் பாதுகாப்பில் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.