நாட்டில் பயிரிடப்பட்ட 20 இலட்சம் ஏக்கர் நெற்பயிர்களில் 15 வீதமான நெற்பயிர் மஞ்சள் நோயினால் அழிவடைந்துள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் திரு.நாமல் கருணாரத்ன நேற்று (18ஆம் திகதி) ‘திவயின’விடம் தெரிவித்தார்.
அரசால் இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிக்கு வழங்கப்பட்ட ஆர்கானிக் நானோ உரங்களை பயன்படுத்துவதால் விவசாயிக்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.