பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நான்கு ஆண்களையும் இரண்டு பெண்களையும் பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் தாயும் அடங்குவதாகவும், அவரது சம்மதத்துடன் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வயது குறைந்த சிறுமி பணத்திற்காக பெரியவர்களுக்கு விற்கப்படுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் குழு சிறுமியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றது.
தொழிலதிபர் ஒருவர் சிறுமியின் தாயை ஏமாற்றி பணத்தை கொடுத்து சிறுமியை பாலியல் தாகத்தை தணிக்க மக்களுக்கு வழங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நான்கு இடங்களில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதை போலீஸார் கண்டறிந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 42, 45, 52 மற்றும் 84 வயதுடையவர்கள், பாணந்துறை, கெசல்வத்த மற்றும் கோரகனா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வியாபாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சிறுமியை பரிசோதனைக்காக பாணந்துறை நீதித்துறை வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.