இலங்கைத் தீவின் தெற்குக் கரையோரப் பகுதியில் சுமார் 125 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இழுவைப் படகு ஒன்றை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுத்துள்ளனர்.
அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த புலனாய்வு நடவடிக்கையில் இந்த பாரியளவிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கூட்டு நடவடிக்கையானது உள்ளூர் பல நாள் மீன்பிடி படகில் இருந்த ஆறு சந்தேக நபர்களை கைது செய்ய வழிவகுத்தது என்று கடற்படை ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தல், இழுவை படகு மற்றும் சந்தேக நபர்கள் இன்று (மே 18) பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளனர்.