பிரம்மாண்டம் என்ற ஒற்றை வார்த்தை படத்தை ஒரு படி தூக்கி விடுகிறது. நடிகர்களின் சம்பளம் தொடங்கி தொழில்நுட்பங்கள் படப்பிடிப்புக்கான செலவு என அதிக பொருட்செலவில் தயாராகும் படங்கள் அதற்குத் தகுந்த லாபத்தை எதிர்நோக்கி காத்துள்ளது. அப்படி பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கும் படங்களில் சில,
அஜித் – வெற்றிமாறன் கூட்டணி : இந்த கூட்டணி யாரும் எதிர்பார்க்காமல் திடீரென அமைந்துள்ளது. விடுதலை படத்தின் தயாரிப்பாளரும், வெற்றிமாறுடன் சேர்ந்து அஜித் படம் பண்ண உறுதியாகியுள்ளது. விடுதலை-2 முடிந்தவுடன் இந்த படத்தின் வேலை ஆரம்பமாகும். கண்டிப்பாக இந்த படம் ஆயிரம் கோடி வசூலை தொடும் என்று இப்பொழுதே பேசப்படுகிறது.
சலார்: பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் கேஜிஎப் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் சலார். சுமார் 400 கோடி பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு வரும் சலார் முதல் பாகம் டிசம்பர் 22 திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரைலர் கே ஜி எஃப் ஐ நினைவூட்டினாலும் ரசிகர்கள் கே ஜி எஃப் ஐ மனதில் வைத்துக்கொண்டு இப்படத்தை எதிர் நோக்க வேண்டாம் முற்றிலும் மாறுபட்ட படமாகவே இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.
காந்தாரா 2: தெய்வ நம்பிக்கையுடன் மக்களின் உணர்வுகளை ஆட்கொண்டு பார்க்கும் அனைவரையும் காந்தாராவில் ஐக்கியமாக செய்திருந்தார் ரிஷப் ஷெட்டி. முதலில் கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா பின் இந்திய மொழிகள் பலவற்றிலும் வெளிவந்து உலக அளவில் வசூலில் 450 கோடியை தாண்டியது. காந்தாராவின் இரண்டாம் பாகம் 125 கோடியில் தயாராகி வருகிறது. கதை ஏற்கனவே வெளிவந்த காந்தாராவிற்கு முன் கதையாக இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியன் 2: பிரம்மாண்டத்திற்கு குறைவு வைக்காத சங்கரின் இந்தியன் 2. 2018 இல் தொடங்கப்பட்ட இப்படம் பல காரணங்களால் இடைநிறுத்தப்பட்டு நான்குஆண்டுகளுக்கு மேல் ரெடி ஆகி வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஊழலுக்கு எதிரான வன்முறையை கையாளும் இந்தியன் தாத்தா 1000 கோடியை எட்டி விடுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
கல்கி 2898 AD: ஹாலிவுட் ரேஞ்சுக்கு இந்தியாவில் தயாராகி வரும் கல்கி 600 கோடி செலவில் எடுக்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாகும். படத்தில் முன்னணி நட்சத்திரங்களாக பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோன் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர். வைஜெயந்தி பிலிம்ஸ் தயாரிப்பில் மகாநடி இயக்குனர் நாக் அஸ்வின் படத்தை இயக்குகிறார். மிக்ஸட் ஜானரில் 2024 இல் வெளிவர இருக்கிறது ப்ராஜெக்ட் K எனப்படும் இந்த கல்கி.
கங்குவா: சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் சூர்யா பல வேடங்களில் நடிக்கும் கங்குவா இந்திய திரை உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் ட்ரெய்லரிலேயே ரசிகர்களை கூஸ் பம்ப் மொமெண்ட் ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். மேலும் ஐ மேக்ஸ் மற்றும் 3டிஇல் வெளியிட பட குழு திட்டமிட்டு வருகிறது.