செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeமருத்துவம்15 நாட்களில் 2 கிலோ வரை உங்கள் எடையை இப்படி குறைத்து பாருங்க!

15 நாட்களில் 2 கிலோ வரை உங்கள் எடையை இப்படி குறைத்து பாருங்க!

Published on

spot_img
spot_img

இன்று பெரும்பாலானவர்களுக்கு ஒபிசிட்டி எனப்படும் இந்த உடல் எடை அதிகரிப்பு தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. உண்ணும் உணவு, இருக்கும் இடம், வாழும் சூழ்நிலை நம் உடல் எடையை நிர்ணயம் செய்கிறது. ஒரு முறை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் முழுமூச்சாக இறங்கி விட வேண்டும். ரெண்டு நாள் செய்து விட்டு சோர்ந்து போய்விட்டால் உடல் எடை குறைப்பு என்பது சாத்தியமாகாது. ரொம்ப சிரமப்படாமல் 10 நிமிடம் மட்டும் ஒதுக்கி, இந்த தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால் 15 நாட்களில் 2 கிலோ வரை எடையும் கணிசமாக குறைத்து விடலாம். அதை பற்றிய பயனுள்ள தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம். உடல் எடையை குறைப்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. ஒல்லியாக இருப்பவர்கள் எளிதாக குண்டாகி விடலாம், ஆனால் குண்டாக இருப்பவர்கள் எளிதாக ஒல்லி ஆகிவிட முடியாது. இதற்கு நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கும். பலரும் பல மாதிரியான விஷயங்களை சாப்பிட்டும் அல்லது வொர்க் அவுட் செய்தும் எந்தப் பலனையும் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால் 15 நாட்கள் மட்டும் தொடர்ந்து கஷ்டப்படாமல் இந்த ஒரு விஷயத்தை செய்தால் உங்கள் எடையை வெகு விரைவாக குறைத்து விடலாம். உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், வயிற்றில் இருக்கும் தொப்பையை குறைக்கவும் இந்த முறை பயனுள்ளதாக இருக்கும். குழந்தை பெற்ற பிறகு தாய்மார்களுக்கு ஏற்படும் தொப்பை அல்லது ஆண்களுக்கு உண்டாகி இருக்கும் மிகப்பெரும் தொப்பை போன்றவற்றைக் கூட எளிதாக கரைக்கக் கூடிய ஆற்றல் இந்த சாதாரண தண்ணீருக்கு உண்டு. பொதுவாக ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் குடித்தால் நம் உடல் எடை சீராக வைத்துக் கொள்ள முடியும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள், கழிவுகள் வெளியேறிவிடும். இதனால் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல் முகத்தில் ஒரு பொலிவு உண்டாகும். ஆனால் உடல் எடையை குறைக்கவும் அல்லது பெல்லி ஃபேட் எனப்படும் தொப்பையை குறைக்கவும் சாதாரண தண்ணீரைக் காட்டிலும் சுடு தண்ணீரை முறையாக இப்படி குடிக்க வேண்டும்.

250ml அளவிற்கு நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை ஒரு நாளைக்கு ஏழு முறை குடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். அரை மணி நேரத்தில் உடலில் இருக்கும் கெட்ட கழிவுகள் அனைத்தும் மலமாக வெளியேறிவிடும். நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக வாயில் வைத்து சூடு பொறுக்கும் அளவிற்கு குடிக்க வேண்டும். குடிக்கும் தண்ணீர் எக்காரணம் கொண்டும் ஆறிவிடக் கூடாது. காலை, மதியம், இரவு என்று சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு டம்ளர், சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் என்ற ஆறு டம்ளர் குடிக்க வேண்டும்.

மொத்தம் ஏழு டம்ளர் ஒரு நாளைக்கு இவ்வகையில் குடித்தால் உங்கள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, நீங்கள் எதை சாப்பிட்டாலும் அதை உங்கள் உடலில் கொழுப்பாக தங்க விடாமல் பார்த்துக் கொள்ள உதவும். அதே போல ஒரு பத்து நிமிடம் ஆவது இந்த பயிற்சியை செய்து பாருங்கள். முதலில் நேராக படுத்துக் கொண்டு கை, கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். உங்கள் கால்களை அப்படியே மெதுவாக மடக்கி உங்கள் நெஞ்சுப் பகுதி வரை கொண்டு செல்லுங்கள். பிறகு அப்படியே கால்களை நேராக விட்டத்தை பார்த்து உயர்த்துங்கள். பிறகு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து, கால்களை கீழே மெதுவாக வையுங்கள். பின்னர் கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். இது போல் 5 நிமிடம் தொடர்ந்து மெதுவாக செய்ய வேண்டும்.

பிறகு ஒரு காலை மட்டும் தூக்கி உங்கள் இரு கைகளுக்கு நடுவில், அந்த கால் இருப்பது போல வைத்து கைகளை வணக்கம் செய்வது போல சேர்க்க வேண்டும். பிறகு சாதாரண நிலைக்கு வந்து, அடுத்த காலை தூக்கி அதே போல கைகளை இரண்டு கால்களுக்கு நடுவே கால் இருக்குமாறு வைத்து கைகளை இணைக்க வேண்டும். இது போல மாறி மாறி ஐந்து நிமிடம் செய்ய வேண்டும். பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி இரண்டு நிமிடத்திற்கு பிறகு எழுந்து உங்கள் வேலையை பார்க்கலாம். 15 நாட்கள் இந்த பயிற்சியுடன், சுடு தண்ணீரை 7 டம்ளர் அளவிற்கு முறையாக இதே மாதிரி குடித்து பாருங்கள். 2 கிலோ முதல் 3 கிலோ எடை வரை கணிசமாக குறைந்துவிடும். அதற்குப் பிறகு இது உங்களுக்கு பழக்கமாகிவிடும். உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க இதை விட சுலபமான வழிமுறை இருக்க முடியாது முயற்சித்து பாருங்கள்.

Latest articles

பிரசார மேடை இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம் 

மெக்சிகோவின் நியூவோ லியோன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மேடையின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்...

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்…..

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில்...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழப்பு…..

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர...

சுகாதார தொழிற்சங்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ...

More like this

பிரசார மேடை இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம் 

மெக்சிகோவின் நியூவோ லியோன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மேடையின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்...

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்…..

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில்...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழப்பு…..

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர...