இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 06 மில்லியன் முட்டைகளை இன்றும் (13) நாளையும் (14) சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாக அரச வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக அவை விற்பனை செய்ய உள்ளதாக கூட்டுத் தாபனத்தின் தலைவர் ஆசிரிய வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
சந்தையில் முட்டையின் விலையில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இச் செயற்பாடு முன்னெடுக்கபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
By: Pirathee