செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைவாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

Published on

spot_img
spot_img

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான விசாரணைகளைப்  பண்டாரவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர்  இராணுவ சிப்பாய் எனவும் மற்றையவர்  இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் வர்த்தக நோக்கத்துக்காக பதுளை மற்றும் அதனை அண்டிய  பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து வாகனங்களை வாடகைக்கு  பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, வேன் என பல வாகனங்கள் இவ்வாறு வாடகைக்குப் பெற்று வாகன உரிமையாளர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில்,  வாகனங்களுக்கான வாடகைத் தொகையை முதல் சில மாதங்களுக்கு செலுத்தி வந்துள்ளனர்.

ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு திடீரென வாகனங்களுக்கு வாடகை கொடுப்பதை நிறுத்திவிட்டு தங்களது கைத்தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோதே சந்தேக நபர்களை தாம் வாடகைக்குப்  பெற்ற வாகனங்களை அடகு வைத்துள்ளமை தெரிய வந்துள்ளது.

Latest articles

தம்புள்ளை நகரில் உலாவித் திரிந்த யானைகளை விரட்டிய பொலிஸார்………

கடந்த 23ஆம் திகதி இரவு தம்புள்ளைக்கு வந்த மூன்று காட்டு யானைகள் நேற்று (24) அதிகாலை வீடுகள் மற்றும்...

ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு கேட்ட முன்னாள் ஜனாதிபதி……

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட கருத்துக்களினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு பில்லியன் ரூபா...

முன்னாள் மேலதிக வகுப்பு ஆசிரியரான உபுல் சாந்த சன்னஸ்கல கைது…….

முன்னாள் பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான உபுல் சாந்த சன்னஸ்கல ,10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை...

நஞ்சற்ற தூய உற்பத்திகளிற்கான பல்பொருள் அங்காடி திறந்து வைப்பு …….

“நஞ்சற்ற சூழல் நேயமிக்க தூய உற்பத்திகளை வீட்டுக்கு கொண்டு செல்வோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் “Vanni Green” இனுடைய...

More like this