செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாபிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல்...

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Published on

spot_img
spot_img

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார் என கூறப்படுகின்றது. போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து உள்ளனர். வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், வார்த்தைகளுக்கு பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்கு பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதியடைந்திருக்கிறார். அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி என தெரிவித்து உள்ளார். இதேபோன்று, வாணி ஜெயராம் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், வாணி ஜெயராம் மறைவு செய்தி கேட்டு துயருற்றேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Latest articles

கரைச்சியில் நலன்புரி நன்மைகள் சபையின் பிரதேச காரியாலயம் திறப்பு ……..

கரைச்சி பிரதேச செயலகத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் பிரதேச காரியாலயம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கரைச்சி பிரதேச செயலாளரும், நலன்புரி நன்மைகள்...

கண்டியில் சுற்றுச் சூழல் பாதிப்பு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் …..

வரி செலுத்தும் மக்களுக்கு தூய்மையான நகரை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பொறுப்பதிகாரிகளின் கடமையாகும். ஆனால், அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் வரலாற்று...

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் காயம் நடந்தது என்ன ?…..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை...

செவ்வாய் கிரகத்திற்கு பயணமாகவுள்ள இலங்கை பெண் …….

செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கான மாதிரி பயணத்தில் பங்கேற்க நாசாவினால் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட தன்னார்வக் குழுவில் இலங்கையை சேர்ந்த...

More like this